இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சைக்கிள் பேரணி
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு இடங்களில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு இடங்களில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
நாடு முழுவதும் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகரிசாமி தலைமை தாங்கினார்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ராமகிருஷ்ணா புரத்தில் தொடங்கிய இந்த பேரணி பஸ் நிலையம், வடக்கு ரதவீதி, சின்னக்கடை பஜார் என முக்கிய வீதிகள் வழியாக வந்து தேரடியில் நிறைவடைந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பஸ் நிலையத்தில் இருந்து, முத்தாலம்மன் பஜார் வரை பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கண்டித்து சைக்கிள் பேரணி நடத்தினர்.
பேரணிக்கு தாலுகா செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி பேரணியை ெதாடங்கி வைத்தார். தாலுகா துணை செயலாளர் மகாலிங்கம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டியன் மற்றும் பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.
சேத்தூர்
சேத்தூர் பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை முன்னாள் எம்.பி.யும், மாவட்ட செயலாருமான லிங்கம் தொடங்கி வைத்தார். பேரணி சேத்தூரில் தொடங்கி முத்துசாமிபுரம், முகவூர், செட்டியார்பட்டி வழியாக தளவாய்புரத்தில் முடிந்தது. இதில் ஒன்றிய செயலாளர் வீராச்சாமி, துணைச் செயலாளர் கணேசமூர்த்தி, விவசாய சங்க பிரதிநிதி அய்யனண், ஒன்றிய கவுன்சிலர் பகத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story