நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க கோரிக்கை
நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு: நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
கர்நாடக ரத்னா விருது
கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு கர்நாடக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ரசிகர்கள், திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஆலோசித்து முடிவு
நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க வேண்டும் என்று திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை பரவல் குறித்து நிபுணர்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். பிற நாடுகளில் நிலைமை என்ன என்பதையும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்திய அரசின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளை நாங்கள் செயல்படுத்துகிறோம். இனிமேல் போலீஸ் துறையில் கவாயத் உத்தரவுகள் கன்னட மொழியில் தான் கூற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். பெலகாவியில் போலீஸ் அதிகாரி ரவிகாந்தேகவுடா பணியாற்றும்போது, இது நடைமுறைப்படுத்தப்பட்டது.
உணவு தானியங்கள்
நான் போலீஸ் துறை மந்திரியாக இருந்தபோது அதற்கு ஒப்புதல் வழங்கினேன். அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும்.
வருகிற ஜனவரி மாதம் 26-ந் தேதி முதல் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விஸ்தரிக்கப்படும். சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் பா.ஜனதா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story