பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்
பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்
ராணிப்பேட்டை
வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நேற்று ஐகோர்ட்டு மதுரை கிளை ரத்து செய்தது. இதனால் வன்னியருக்கான தனி இட ஒதுக்கீட்டை மீண்டும் அமுல்படுத்த கோரியும், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் நேற்று மாலை ராணிப்பேட்டை முத்துக்கடையில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் வன்னியர் சங்க மாநில செயலாளர் எம்.கே.முரளி தலைமையிலும், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எல்.இளவழகன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டமும், திடீர் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.
இதில் பா.ம.க. மாநில துணை அமைப்பு செயலாளர் தங்கதுரை, மாநில சமூக நீதி பேரவை துணை செயலாளர் ஜானகிராமன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இந்த திடீர் சாலை மறியலினால் போக்குவரத்து சிறிது நேரம் பாதித்தது.
Related Tags :
Next Story