கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி


கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி
x
தினத்தந்தி 2 Nov 2021 5:46 PM IST (Updated: 2 Nov 2021 5:46 PM IST)
t-max-icont-min-icon

கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி

குண்டடம்
குண்டடம் பகுதியில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த 1ந் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த முகாம் 31ந் தேதி வரை நடைபெறும். அதன்படி  குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட
தொட்டியன்துறை கால்நடை மருந்தக மருத்துவர் ரவிக்குமார் மற்றும் உதவியாளர் பிரேமலதா ஆகியோர் 150 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்
இதேபோல் குண்டடம், பெரியகுமாரபாளையம், சின்னமோளரபட்டி, தும்பலப்பட்டி, பீலிக்காம்பட்டி, முதலிபாளையம், குள்ளம்பாளையம், சங்கரண்டாம்பாளையம் பகுதிகளில்  கோமாரி நோய்த்தடுப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது. இந்தமுகாமில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 
-

Next Story