தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளது
நெல்லை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
மேலப்பாளையம் சந்தை
நெல்லை மேலப்பாளையத்தில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் இந்த சந்தை மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதையொட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு ஆடு, மாடு உள்ளிட்டவை விற்பனை நடைபெற்று வருகிறது.
வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் செயல்படும் இந்த சந்தையில் சமீபத்தில் ஆடு, மாடுகளுக்கான நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டது. இருந்தபோதிலும் விவசாயிகள், வியாபாரிகள் இங்கு கால்நடைகளை விற்கவும், வாங்கவும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
களை கட்டிய விற்பனை
இந்த நிலையில் நேற்று காலையில் மழை சற்று இடைவெளி விட்டிருந்தது. இதனால் ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இந்த சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இதனால் ஆடுகளின் விலை உயர்ந்தது. சிலர் மழைக்காலம் என்பதால் ஆட்டுக்குட்டிகளை வளர்க்கவும் வாங்கிச்சென்றனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது.
தீபாவளி பண்டிகை அன்று இறைச்சி கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் ஆடு வாங்க, விற்க வந்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் மேலப்பாளையம் சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story