கடையநல்லூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 350 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
கடையநல்லூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 350 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
கடையநல்லூர்:
திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் போலீசார் அனுமதியின்றி நடைபெற்றதாக மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம், மாநில செயலாளர்கள் செய்யது அலி, செங்கை முஹம்மது பைசல், மாவட்ட செயலாளர் அப்துல் பாஷித், மாவட்ட பொருளாளர் ஜலாலுதீன் மற்றும் நிர்வாகிகள், 150 பெண்கள் உள்பட 350 பேர் மீது கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்தார்.
Related Tags :
Next Story