அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
போடி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கலெக்டர் முரளிதரன் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
தேனி:
போடியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி, துரைச்சாமிபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வாசிப்புத்திறனை ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? சத்துணவு தரமாக உள்ளதா? என்றும், வருகைப்பதிவேடு, கழிப்பிட வசதி போன்றவற்றையும் பார்வையிட்டார்.
பின்னர், துரைச்சாமிபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையம், கால்நடை மருத்துவமனை ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார். முன்னதாக போடி நகரில் உள்ள ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் பொருட்களை சரியான அளவில் மக்களுக்கு தவறாமல் வழங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story