கள்ளக்காதலியுடன் தங்கிய கள்ளக்காதலன் மீது தாக்குதல். மற்றொரு கள்ளக்காதலன் கைது


கள்ளக்காதலியுடன் தங்கிய கள்ளக்காதலன் மீது தாக்குதல். மற்றொரு கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 2 Nov 2021 10:08 PM IST (Updated: 2 Nov 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே கள்ளக்காதலி வீட்டுக்கு ஒரே நேரத்தில் 2 கள்ளக்காதலர்கள் வந்ததால் ஏற்பட்ட மோதலில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆற்காடு

ஆற்காடு அருகே கள்ளக்காதலி வீட்டுக்கு ஒரே நேரத்தில் 2 கள்ளக்காதலர்கள் வந்ததால் ஏற்பட்ட மோதலில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆற்காடு அருகே நடந்த இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கள்ளக்காதல்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 55). விதவையான இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் இந்திரா கடந்த சில ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சேகர் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா மீண்டும் சொந்த ஊரான ஆற்காடு அடுத்த தாழனூர் பகுதிக்கு வந்துவிட்டார். ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் டிராக்டரில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அப்போது சீனிவாசனுக்கும், இந்திராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

தாக்குதல்

இதனால் சீனிவாசன் இந்திராவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு சீனிவாசன், இந்திரா வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் வாணியம்பாடி யைச் சேர்ந்த மற்றொரு கள்ளக்காதலன் சேகரும் இந்திராவை சந்திக்க தாழனூர் வந்துள்ளார். 

அப்போது இந்திரா வீட்டில் சீனிவாசன் இருப்பதைக் கண்ட சேகர் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் சீனிவாசனும், இந்திராவும் சேர்ந்து சேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த சேகர் அங்கிருந்த இரும்புக் கம்பியால் சீனிவாசன் மற்றும் இந்திராவை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த இருவரும் வாலாஜா அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரி சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story