கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு செல்போன் பரிசு


கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு செல்போன் பரிசு
x
தினத்தந்தி 2 Nov 2021 10:19 PM IST (Updated: 2 Nov 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் ஒன்றியம் அழகாபுரி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு செல்போன் பரிசாக வழங்கப்பட்டது.

சின்னமனூர்: 

சின்னமனூர் ஒன்றியம் அழகாபுரி ஊராட்சியில் கடந்த 23-ந்தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் தடுப்பூசி செலுத்தியவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் 5 நபருக்கு செல்போன், 10 பேருக்கு சுவர் கடிகாரம் மற்றும் தேநீர் குவளை செட் பரிசாக நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் மருதப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜ், மற்றும் ஊராட்சி செயலர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். இதன் மூலம் 100 சதவீதம் தடுப்பூசி போட்ட ஊராட்சியாக அழகாபுரியை தேர்வு செய்யும் வகையில் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் கூறினார். 

Next Story