பொதுப்பணித்துறை பெண் ஊழியருக்கு வரதட்சணை கொடுமை


பொதுப்பணித்துறை பெண் ஊழியருக்கு வரதட்சணை கொடுமை
x
தினத்தந்தி 2 Nov 2021 10:41 PM IST (Updated: 2 Nov 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் பொதுப்பணித்துறை பெண் ஊழியருக்கு வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 2 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி: 

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர், போடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராஜராஜேஸ்வரி. இவர் தேனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். 

இந்நிலையில், ராஜராஜேஸ்வரியின் பெயரில் இருக்கும் சொத்துகளை தனது பெயரில் எழுதி வைக்குமாறும், வரட்சணை கேட்டும் அவருடைய கணவர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர் பணியாற்றும் இடத்துக்கும் சென்று அவருடைய கணவர் தகராறு செய்துள்ளார். 

இதற்கு அவருடைய மாமியார் சந்திரலேகா தூண்டுதலாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ராஜராஜேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் அவருடைய கணவர் கார்த்திக், மாமியார் சந்திரலேகா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story