நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு; பலி எண்ணிக்கை 500-ஐ தொட்டது


நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு; பலி எண்ணிக்கை 500-ஐ தொட்டது
x
தினத்தந்தி 2 Nov 2021 10:45 PM IST (Updated: 2 Nov 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். இதனால் இதுவரை பலியான நபர்களின் எண்ணிக்கை 500-ஐ தொட்டது.

நாமக்கல்:
2 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 498 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 51 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு இதுவரை பலியான நபர்களின் எண்ணிக்கை 500-ஐ தொட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 52 ஆயிரத்து 290 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 335 ஆக அதிகரித்து உள்ளது.
482 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று 52 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 51 ஆயிரத்து 353 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 482 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் ஒரே நாளில் 2 பேர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story