கிருஷ்ணகிரியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி புகைப்படத்துடன் கூடிய வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்யவும், வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல் குறித்தும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் முருகேசன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story