மழைக்கு வீட்டின் சுவர் விழுந்து மூதாட்டி சாவு
மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி இறந்தார்.
ராமநாதபுரம்,
மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி இறந்தார்.
சுவர் இடிந்து விழுந்தது
ராமநாதபுரத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் ராமநாதபுரம் தெற்கு முனியசாமி தெருவில் என்பவரின் அங்குச்சாமி என்பவரது மனைவி ரெத்தினம்மாள் (வயது 75) என்பவர் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் ஓட்டுவீட்டில் தனியாக படுத்திருந்தார். அவரது 2 மகன்களும் பக்கத்து வீட்டில் படுத்திருந்தனர்.
நள்ளிரவில் பலத்த மழையால் ஓட்டுவீட்டின் உள்புற சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி ரெத்தினம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். நள்ளிரவில் மழைபெய்ததால் இந்த சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.
உறவினர்கள் கதறல்
அதிகாலையில் இடிபாடுகளில் சிக்கி ரெத்தினம்மாள் பலியான தகவல் அறிந்து அவரது மகன்கள், உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி ரெத்தினம்மாளின் உடலை மீட்டனர். அவரது உடல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்த ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி விவரங்களை கேட்டறிந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story