அதிகபட்சமாக வந்தவாசியில் 47 மில்லி மீட்டர் மழை பதிவு


அதிகபட்சமாக வந்தவாசியில் 47 மில்லி மீட்டர் மழை பதிவு
x
தினத்தந்தி 2 Nov 2021 11:39 PM IST (Updated: 2 Nov 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 47 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 47 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

 தொடர் மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் இருந்து மழை பெய்தது. 

தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் சேறும், சகதியுமாக காணப்பட்டது. 

நேற்று முன்தினம் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த தொடர் மழையினால் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது விட்டு, விட்டு லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பெய்துவரும் மழையினால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. 

சாத்தனூர் அணையில் 97.45 அடி தண்ணீரும், குப்பநத்தம் அணையில் 57.07 அடி தண்ணீரும், மிருகண்டா நதியில் 20.34 அடி தண்ணீரும், செண்பகத்தோப்பு அணையில் 53.40 அடி தண்ணீரும் உள்ளது. 

 குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

மேலும் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலை அருகில் உள்ள நோச்சிமலை ஏரி நிரம்பி உபரிநீர் தொடர்ந்து வெளியேறி வருகின்றது. 

இதனால் ஏரியின் அருகில் உள்ள கிருஷ்வேணி நகர், வீனஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் புகுந்து சுமார் 4 அடி வரை தண்ணீர் உள்ளது. 

இதனால் அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 47 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில வருமாறு:- 

ஆரணி, செய்யாறு மற்றும் கீழ்பென்னாத்தூர்-23, கலசபாக்கம்-20, சேத்துப்பட்டு-19, திருவண்ணாமலை-18, ஜமுனாமரத்தூர்-16, தண்டராம்பட்டு-15.6, போளூர்-15.2, வெம்பாக்கம்-12, செங்கம்- 7.2. 

Next Story