ராமநாதபுரத்தில், ெபாருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்
தீபாவளி பண்டிகையையொட்டி ராமநாதபுரத்தில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
ராமநாதபுரம்,
தீபாவளி பண்டிகையையொட்டி ராமநாதபுரத்தில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைேமாதியது.
பொதுமக்கள் கூட்டம்
இந்தியா முழுவதும் நாளை(வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் துணிகள் மற்றும் பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க கடைகளில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் இருந்து அரண்மனை செல்லும் சாலை தெரு மற்றும் அக்ரஹார சாலை, கடைவீதி, அரண்மனை சாலை உள்ளிட்ட சாலைப்பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
ேபாலீசார் கண்காணிப்பு
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள காரணத்தால் இந்த சாலைகளில் அரசு பஸ் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்ல காவல்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதுபோல் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு தீபாவளியின் போதும் கூட கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் இந்த அளவு மக்கள் கூட்டம் இல்லை.ஆனால் இந்த ஆண்டு பரவல் அதிக அளவு குறைந்து வருவதால் மக்கள் நிம்மதியாக கடைகளில் ஜவுளி உள்ளிட்ட பல பொருட்களை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதேபோல் ராமேசுவரம், பரமக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள ஊர்களில் உள்ள கடை வீதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story