ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு
தளவாபாளையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நொய்யல்,
ரியல் எஸ்டேட் அதிபர்
தளவாபாளையம் ஓவர் டேங்க் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 44). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் தளவாபாளையம் மாரியம்மன் கோவில் அருகே பாலமுருகன் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டக்குறிச்சி அருகே குன்னிக்காட்டூர் பகுதியை சேர்ந்த முரளிராஜா, சங்கர், கந்தசாமி ஆகியோர் சேர்ந்து பாலமுருகனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முரளிராஜா, பாலமுருகனை கீழே தள்ளினார். பின்னர் சங்கரும், கந்தசாமியும் அவரை பிடித்துக்கொண்டனர். அப்போது முரளிராஜா பாலமுருகனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
3 பேருக்கு வலைவீச்சு
இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த பாலமுருகனை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story