திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு


திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 3 Nov 2021 12:01 AM IST (Updated: 3 Nov 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவாரூர்;
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
கொரோனா
கொரோனா காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழகம் முழுவதும்  பள்ளிகள்    மூடப்பட்டது. இந்நிலையில் நோய் தொற்றின் வேகம் குறைந்ததால் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.  திருவாரூர் மாவட்டத்தில் கன மழை காரணமாக நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 
இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 1049 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது.  பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் வீடுகளில் இருந்து புத்தக பைகளை சுமந்து புறப்பட்டனர்.
வரவேற்பு
19 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பூங்கொத்து, இனிப்புகளை வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.  திருவாரூர் மெய்பொருள் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சுமதி தலைமையில் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து, இனிப்பு, சந்தனம் வழங்கி வரவேற்றனர். முன்னதாக அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளின் படி மாணவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 
மேலும் உடல் வெப்ப நிலை கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. வகுப்பறையில் 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் போதிய சமூக இடைவெளியுடன் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தினர்.
 

Next Story