அரசின் விதிமுறைகளை பின்பற்றாத டாஸ்மாக் பாருக்கு ‘சீல்’
டாஸ்மாக் பாருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
அறந்தாங்கி:
கொரோனா ஊரடங்கின் தளர்வு காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள், பார்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்கப்படுகிறதா? என பார்வையிட்டனர். அப்போது அறந்தாங்கியில் அரசின் விதிமுறைகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத ஒரு டாஸ்மாக் பாருக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். உரிய வழிகாட்டு முறைகளை பார் உரிமையாளர்கள் பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story