கடை வீதிகளில் திரண்ட பொதுமக்கள்
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் நேற்று திருச்சி கடைவீதியில் மக்கள் அலைமோதியது. கொட்டும் மழையிலும் வியாபாரம் சூடு பிடித்தது.
திருச்சி, நவ.3-
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் நேற்று திருச்சி கடைவீதியில் மக்கள் அலைமோதியது. கொட்டும் மழையிலும் வியாபாரம் சூடு பிடித்தது.
கடை வீதியில் திரண்ட மக்கள்
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாநகரத்துக்குட்பட்ட மெயின்கார்டுகேட் என்.எஸ்.பி.ரோடு, பெரியகடைவீதி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட கடைவீதிகளில் ஏராளமான பொதுமக்கள் ஜவுளி வகைகள் எடுக்கவும், நகைகள் மற்றும் பொருட்களை வாங்கவும் திரண்டனர். இதனால் திருச்சி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளதால் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் ஜவுளி எடுப்பதற்காக திருச்சி கடைவீதி பகுதிக்கு குடும்பம், குடும்பமாக வந்து செல்கிறார்கள்.
கொட்டும் மழையிலும்சூடு பிடித்த வியாபாரம்
திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. எனவே, தீபாவளி பண்டிகை வேளையில் வியாபாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், நேற்று அவ்வப்போது மழை பெய்தாலும் பொதுமக்கள் தீபாவளிக்கு ஜவுளி உள்ளிட்ட வேண்டிய பொருட்களை வாங்க குடை சகிதமாக திரண்டனர். இதனால், சாலையோர வியாபாரம் முதல் பெரிய கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்தது.
கண்காணிப்பு கேமராக்கள்
திருடர்களை கண்காணிக்கும் வகையில் மெயின்கார்டுகேட், சிங்காரத்தோப்பு, சத்திரம் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மாநகர காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவிடும் வகையிலும், திருச்சி என்.எஸ்.பி.ரோட்டில் தெப்பக்குளம் அருகே காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பாதுகாப்பு பணிக்காக கடைவீதியில் போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உள்பட 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் பொதுமக்கள் தங்கள் உடைமைகளையும், நகைகளையும் பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருச்சி மாநகரில் தனியார் வணிக வளாகங்கள், குடியிருப்புகள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் கேமராக்களை நிறுவிய கேமராக்களை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
59 பேருக்கு பட்டாசு விற்க அனுமதி
இதேபோல் கடைவீதிக்குவரும் வாகனங்களை நிறுத்தவும், தனியாருக்கு சொந்தமான இடங்களில் பார்க்கிங் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் விற்பனை செய்ய 59 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story