திண்டுக்கல் அருகே பேராசிரியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு


திண்டுக்கல் அருகே பேராசிரியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 3 Nov 2021 12:54 AM IST (Updated: 3 Nov 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே பேராசிரியர் வீட்டில் 10 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் என்.எஸ்.நகர் அருகே உள்ள ராஜகாளியம்மன் நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 50). இவர் பெரியகுளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அகிலா, திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி 2 பேரும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டனர். இதனால் வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை அவர்கள் திருடிச்சென்றனர். இதற்கிடையே பணி முடிந்து வீட்டிற்கு வந்த முத்துராமலிங்கம், வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. 
இதுகுறித்து அவர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story