தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
பள்ளிக்கட்டிடம் சீரமைக்கப்படுமா?
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் ரெட்டிப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு வீசிய காற்றில் பள்ளியின் மேற்கூரையில் உள்ள ஓடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு உடைந்துவிட்டது. இதனால் பள்ளி கட்டிடம் மழை நாட்களில் ஒழுகுகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளியின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், ரெட்டிப்புதூர், நாமக்கல்.
நோய் பரவும் அபாயம்
சேலம் நெத்திமேடு சாய்நகரில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். எனவே தேங்கிய மழைநீரை அகற்றவும், தெருவிளக்கு அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.சம்பகேசன், சாய் நகர், சேலம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் சொர்ணபுரி சத்யநாராயணன் சாலை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ளவும், சாலையை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சொர்ணபுரி, சேலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து தேவசமுத்திரம் கிராமம், நமாஸ்பறை எதிரில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் தினம்தோறும் குப்பையை கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து சாலையில் சிதறி கிடக்கின்றன. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தோற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அள்ள உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோ.சரண் குமார், தேவசமுத்திரம், கிருஷ்ணகிரி.
சேலம் குகை ராமலிங்கசாமி கோவில் தெருவில் பல நாட்களாக குப்பைத்தொட்டி நிரம்பி வழிகின்றன. இதனால் அந்த வழியாக செல்வோர் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய உள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பையை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், குகை, சேலம்.
=====
தெருவிளக்கு எரியவில்லை
சேலம் சிவதாபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் 5 நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு எரிய செய்ய வேண்டும்.
-முகம்மதுஅலி, சிவதாபுரம், சேலம்.
சாலையில் தேங்கும் மழைநீர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கிரைன் பஜார் சாலையின் நிலை மோசமாக காணப்படுகிறது. சேலம்-சென்னை முக்கிய சாலை மற்றும் சேலம்-பெரம்பலூர் பிரதான சாலை மழைக்காலங்களில் சாலையின் ஒரு புறம் மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும். மறுபுறம் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நடந்து செல்பவர்கள் சாலையில் தேங்கி உள்ள மழைநீரால் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், ஆத்தூர். சேலம்.
ஆபத்தான நிலையில் மின்கம்பம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுகா கந்தம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மேற்கு தெருவில் தார் சாலை ஓரத்தில் மின்கம்பம் முட்புதருக்குள் ஆபத்தான நிலையில் உள்ளது. செடி, கொடிகள் மின்கம்பத்தின் மீதும், மின்சார வயர்களின் மீதும் பரவி கிடக்கிறது. இரவு நேரங்களில் மின்விளக்கும் எரிவது இல்லை. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே ஆபத்தான மின்கம்பத்தை சுற்றி உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கந்தம்பாளையம், நாமக்கல்.
தேங்கி கிடக்கும் கழிவுநீர்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா கொங்கணாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதி பெரிய மாரியம்மன் கோவில் தெருவில் மழைக்காலங்களில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி விடுகிறது. இதனால் கொசுத்தொல்லை மற்றும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் நிறைந்த பகுதியாக மாறி விட்டது. எனவே தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மா.அறிவரசன், கொங்கணாபுரம், சேலம்.
சேலம் மாவட்டம் கஸ்தூரிபாய்தெருவில் சாக்கடை கால்வாய் தூய்மை செய்யாமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குழந்தைகள், முதியவர்கள்காய்ச்சலால் பாதிப்பு அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், கஸ்தூரிபாய் தெரு, சேலம்.
இருளில் மூழ்கும் சாலை
தர்மபுரி- சேலம் சாலையில் தர்மபுரி நகரில் இருந்து ஒட்டப்பட்டி பகுதி வரை சாலையின் மைய தடுப்பு பகுதியில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒட்டப்பட்டி முதல் ரெயில்வே மேம்பாலம் வரை உள்ள பகுதியில் இரவு நேரங்களில் சாலை இருளில் மூழ்கி விடுகிறது. அதிக வாகன போக்குவரத்து கொண்ட இந்த சாலை இரவில் போதிய வெளிச்சம் இன்றி காணப்படுவதால் சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கடந்து செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதை தவிர்க்க ஒட்டப்பட்டி முதல் அதியமான்கோட்டை ரெயில்வே மேம்பாலம் தொடங்கும் பகுதி வரை சாலையின் மையத் தடுப்பு பகுதியில் மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
-மாதவன், ஒட்டப்பட்டி, தர்மபுரி.
Related Tags :
Next Story