புனித் ராஜ்குமார் குறித்து அவதூறு கருத்து; வாலிபர் கைது
புனித் ராஜ்குமார் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு: புனித் ராஜ்குமார் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
எங்களை தடுக்க முடியாது
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பால் கடந்த மாதம் 29-ந்தேதி இறந்தார். அவரது இறப்பையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க பெங்களூருவில் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புனித் ராஜ்குமாரின் புகைப்படத்தை பதிவு செய்தார். மேலும் அந்த புகைப்படத்தின் கீழ் மதுக்கடைகளை மூடி எங்களை தடுக்க முடியாது.
நாங்கள் பீரை குடித்துவிட்டு உங்களின் கல்லறையில் வந்து அழுவோம் என்று எழுதி இருந்தார். மேலும் புனித் குறித்து சில அவதூறு கருத்துகளையும் அவர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு புனித் ராஜ்குமார் ரசிகர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
வாலிபர் கைது
அந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினர். மேலும் பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திலும் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் புனித் ராஜ்குமார் குறித்து அவதூறு கருத்துகளை பதிவு செய்த வாலிபர் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து உள்ளனர்.
சட்ட நடவடிக்கை
இந்த தகவலை பெங்களுரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உறுதி செய்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புனித் ராஜ்குமார் குறித்து அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story