கவுன்சிலர்களை கடத்தியதாக குற்றம்சாட்டி போலீஸ் நிலையம் முன்பு காங்கிரசார் தர்ணா
குடிபண்டே டவுன் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் சமயத்தில் கவுன்சிலர்களை கடத்தியதாக குற்றம்சாட்டி போலீஸ் நிலையம் முன்பு சுப்பாரெட்டி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் தர்ணா நடத்தினர்.
சிக்பள்ளாப்பூர்: குடிபண்டே டவுன் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் சமயத்தில் கவுன்சிலர்களை கடத்தியதாக குற்றம்சாட்டி போலீஸ் நிலையம் முன்பு சுப்பாரெட்டி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் தர்ணா நடத்தினர்.
குடிபண்டே டவுன் பஞ்சாயத்து தேர்தல்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே டவுன் பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடக்க இருந்தது. குடிபண்டே டவுன் பஞ்சாயத்து பொறுத்தவரை காங்கிரசார் 6, ஜனதா தளம்(எஸ்) 2, சுயேட்சைகள் 3 என மொத்தம் 11 உறுப்பினர்களை கொண்டது. பா.ஜனதாவுக்கு ஒரு உறுப்பினர் கூட கிடையாது.
இந்த நிலையில் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீர் மாயமாகியதாக தெரிகிறது. அவர்களை, பா.ஜனதாவினர் கடத்திவிட்டதாக காங்கிரசார் குற்றச்சாட்டுகின்றனர்.
காங்கிரசார் தர்ணா-பரபரப்பு
இந்த நிலையில் குடிபண்டே சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., சுப்பாரேட்டி தலைமையில் நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தல் நடக்கும் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் எம்.எல்.ஏ, மற்றும் ஆதரவாளர்களை தடுத்த நிறுத்தினர்.
இதனால் போலீசார் மற்றும் காங்கிரசார் இடைய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கை, கலப்பாக மாறியது. இதில் காங்கிரசார் தாக்குதல் நடத்தியதால் 5-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசாந்த், சுப்பாரெட்டி எம்.எல்.ஏ.வின் சட்பை காலரை பிடித்து தள்ளியதாக காங்கிரசார் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து சுப்பா ரெட்டி எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் குடிபண்டே போலீஸ் நிலையம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் குடிபண்டே பகுதியில் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.
அப்போது சுப்பாரெட்டி எம்.எல்.ஏ. கூறியதாவது:-
குறுக்கு வழியில் பிடிக்க முயற்சி
குடிபண்டே டவுன் பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. அப்படி இருந்தும் சிக்பள்ளாப்பூர் மாவட்ட பொறுப்பு மந்திரி சுகாதாகர் குறுக்கு வழியில் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களை கடத்திச் சென்று குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறார். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கவிடமாட்டோம். கடத்தி சென்ற காங்கிரஸ் உறுப்பினர்களை உடனே கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்தவேண்டும். இல்லையேல் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story