வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் திருட்டு
தாராபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தாராபுரம்,
தாராபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வக்கீல்
தாராபுரம்-பொள்ளாச்சி சாலை செட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்வயது 37. வக்கீல். இவர் கடந்த 31ந் தேதி தனது மனைவியின் பாட்டி இறந்ததற்கு துக்கம் விசாரிக்க வீட்டின் கதவை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அவினாசிக்கு காரில் சென்றார். பிறகு இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு பிறகு நேற்று குடும்பத்துடன் காரில் தாராபுரம் வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்த போது இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.
நகை திருட்டு
அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.20 ஆயிரம் வைக்கப்பட்டிருந்தது. அதனை தேடி பார்த்தார். அப்போது பீரோவில் பணம், நகை இல்லை. அவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் சுரேஷ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தனிப்படை அமைத்து தேடி வருகிறார். இதனால் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story