பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா
பஸ், ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகிறதா என நேற்று போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
திருப்பூர்
பஸ், ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகிறதா என நேற்று போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
பட்டாசுகள்
நாடு முழுவதும் நாளை வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருப்பூரில் வேலை பார்க்கும் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள்போனஸ் தொகையை பெற்றுக்கொண்டு சொந்த ஊர்களுக்கு பஸ்கள் மற்றும் ரெயில்களில் செல்கிறார்கள்.
பஸ் மற்றும் ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பண்டிகை கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்கள் கொண்டு செல்லும் வாய்ப்புள்ளது என்பதால் நேற்று மாநகரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் பழைய பஸ் நிலையம் மற்றும் கோவில்வழி பஸ் நிலையங்களில் தெற்கு போலீசார் பஸ்களில் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
சோதனை
இதுபோல் திருப்பூர் ரெயில் நிலையத்திலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில்களில் வெளியூர்களுக்கு சென்ற பயணிகளிடமும், ரெயில்களில் திருப்பூருக்கு வந்த பயணிகளிடமும் பட்டாசுகள் கொண்டு செல்கிறார்களா? என சோதனை செய்தனர். மேலும், பட்டாசுகள் கொண்டு செல்லக்கூடாது, அவ்வாறு கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கையும் விடுத்தனர்.
-
Related Tags :
Next Story