குப்பையில் கிடந்த தங்கம்: உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு, எஸ்.வி.சேகர் பாராட்டு
குப்பையில் கிடந்த தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு, எஸ்.வி.சேகர் பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை,
தவறுதலாக குப்பையில் போடப்பட்ட 100 கிராம் எடை கொண்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை குப்பையை பிரிக்கும் போது கண்டுபிடித்த தூய்மை பணியாளர் மேரி, போலீசாரை உடனடியாக தொடர்பு கொண்டு, அந்த தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். அவருடைய நல்ல மனதையும், குணத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பணமே முக்கியம், நேர்மையாக வாழ்வது மிகக்கடினம் என நினைக்கும் இக்காலத்திலும், வறுமையிலும், ஏழ்மையிலும் அடுத்தவர் பொருள் நமக்கு வேண்டாம் என நினைத்த மேரியின் மிகப்பெரிய நேர்மையான இச்செயலை பாராட்டி என் தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.5 ஆயிரம் வழங்குவதில் பெருமை அடைகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story