over flood realise the amarawathi dam


over flood realise the amarawathi dam
x
தினத்தந்தி 3 Nov 2021 4:10 PM IST (Updated: 3 Nov 2021 4:10 PM IST)
t-max-icont-min-icon

நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தளி
நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் அணையின் நீராதாரங்கள் ஆகும்.  இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.
அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாத இறுதியில் அமராவதிஅணையின் நீராதாரங்களில் மழை தீவிரம் அடைந்தது.  அங்கு ஆறுகளில் நீர் வரத்து ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அமராவதி அணைக்கு அதிக அளவு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. அணை அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இறுதியில் ஆற்று மதகுகள் மற்றும் பிரதான கால்வாய் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
 தண்ணீர் திறப்பு 
அதன் பின்பு மழைப்பொழிவின் தாக்கம் குறைந்ததால் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர் வரத்தும் குறைந்து வந்தது.அத்துடன் அணையின் நீராதாரங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால் அணையும் அதன் முழு கொள்ளளவில் நீடித்து வந்தது.இதனால் நீர்வரத்து கூடுதலாக உள்ள போது அதிகமாகவும் குறைவாக உள்ளபோது குறைத்தும் நிலைமைக்கு ஏற்றவாறு அவ்வப்போது உபரிநீர் வெளியேற்றப் வந்தது.அதைத்தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர் இருப்பு 80 அடியாக சரிந்தது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தை யொட்டி அணையின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.மழையின் காரணமாக நேற்று காலை திடீரென 2 ஆயிரம் கனஅடிக்கும் மேலாக நீர்வரத்து ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து அணையில் உள்ள ஷட்டர்கள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
வானம் இருள் சூழ்ந்து மேகமூட்டமாக காணப்படுவதால் கனமழை செய்வதற்காக சூழல் நிலவுகிறது. இதை தொடர்ந்து அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தை உதவிப் பொறியாளர் பாபுசபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் 9 கண் மதகுகள், ஷட்டர்கள், பிரதான கால்வாய் வழியாக கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகளும் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனால் அமராவதி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

-

Next Story