மஞ்சள் சாகுபடி


மஞ்சள் சாகுபடி
x
தினத்தந்தி 3 Nov 2021 4:12 PM IST (Updated: 3 Nov 2021 4:12 PM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பொங்கலூர்
பொங்கலூர் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மஞ்சள் சாகுபடி
பொங்கலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக இங்கு காய்கறிகள் மற்றும் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை வளர்ப்பும் பெருமளவில் உள்ளது. மேலும் பொங்கலூர் பகுதியில் மஞ்சள் சாகுபடி நூற்றுக்கணக்கான ஏக்கரில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
 ஒரு ஆண்டு பயிரான மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது பொங்கலூர் தேவணம்பாளையம், நல்ல காளிபாளையம், உகாயனூர் உட்பட பல்வேறு இடங்களில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நன்கு வளர்ந்து பச்சைபசேலென காட்சியளிக்கும் மஞ்சள் வரும் தை அல்லது மாசி மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். 
விற்பனை
இங்கு உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் ஈரோட்டில் உள்ள விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

---
பொங்கலூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் பயிரை படத்தில் காணலாம்.


Next Story