வாகனங்கள் துருப்பிடிக்கும் அவலம்
வாகனங்கள் துருப்பிடிக்கும் அவலம்
தளி,
உடுமலை போலீஸ் நிலையம் கட்டுப்பாட்டில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த எல்லைக்கு உட்பட்ட பகுதி வழியாக உடுமலை, ஆனைமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையில் நடைபெறுகின்ற வாகன விபத்துகள், குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்த வாகனங்களை உரிமை கோர அதன் உரிமையாளர்கள் வருவது இல்லை. அப்படியே வந்தாலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் மதிப்பை விட கூடுதலாக செலவு செய்ய நேரிடுகிறது. இதனால் வாகன உரிமையாளர்கள் அந்த வாகனத்தை உரிமை கோர வருவது இல்லை. இப்படி பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து வீணாகிறது. சில வாகனங்கள் துருப்பிடித்து விட்டன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- வழக்கில் தொடர்புடைய நபர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்ட வாகனத்தை எடுத்து பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலம் விட வேண்டும். என்றனர்.
Related Tags :
Next Story