கனமழைக்கு 2 வீடுகள் இடிந்தன


கனமழைக்கு 2 வீடுகள் இடிந்தன
x
தினத்தந்தி 3 Nov 2021 6:47 PM IST (Updated: 3 Nov 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

திருவாடானை அருகே கனமழைக்கு 2 வீடுகள் இடிந்து சேதமானது.

தொண்டி, 
திருவாடானை அருகே கனமழைக்கு 2 வீடுகள் இடிந்து சேதமானது.
கனமழை
திருவாடானை தாலுகாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று பெய்த கனமழையின் காரணமாக திருவாடானை அருகே உள்ள திருவடிமிதியூர் கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன் உடை யப்பன் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. 
இதுபற்றி தகவல் அறிந்த திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். 
நிவாரண உதவி
இதுதொடர்பாக விரைவாக அரசின் நிவாரண உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதேபோல தொண்டி அருகே உள்ள கானாட்டாங்குடி எம்.வி.பட்டினம் காந்தி நகர் கிராமத்தைச் சேர்ந்த நாகசாமி என்பவருக்குச் சொந்தமான ஓட்டு வீடு இடிந்து சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த திருவாடானை தாசில்தார், தொண்டி வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக விரைவில் அரசின் நிவாரண உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story