அரசு பஸ் மோதி ஊராட்சி செயலர் பலி


அரசு பஸ் மோதி ஊராட்சி செயலர் பலி
x
தினத்தந்தி 3 Nov 2021 7:29 PM IST (Updated: 3 Nov 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்மோதி ஊராட்சி செயலர் பரிதாபமாக உயிரிழந்தார்

திருப்புவனம், 
அரசு பஸ்மோதி ஊராட்சி செயலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
திருப்புவனம் பக்கம் உள்ள மடப்புரம் விலக்கு, எம்.ஜி.ஆர். நகரில் குடியிருந்து வருபவர் குமார் (வயது45). இவர் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா ஆலாத்தூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார்.  பணி முடிந்து திருப்புவனத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். திருப்புவனத்தை அடுத்த அல்லிநகரம் விலக்கு அருகே வரும்போது மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து பழையனூர் சென்ற அரசு டவுன் பஸ் குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமார்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை
சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீராளன், அரசு டவுன் பஸ் டிரைவர் தங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். இறந்துபோன ஊராட்சி செயலர் குமாரின் உடல் திருப்பு வனம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story