திருக்குறள் முற்றோதல் போட்டி
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு 19-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு 19-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
சான்றிதழ்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டு தோறும் உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
“திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டிற்கு மாணவ-மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருக்க வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்பு பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகப் கொள்ளப்படும்.
பரிந்துரை
முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநரால் பரிந்துரைக்கப்படும்.
ஏற்கனவே, இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது. திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம்
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் வருகிற 19-ந் தேதிக்குள் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், 2-ம் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் இத்தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story