மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; பெயிண்டர் சாவு


மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; பெயிண்டர் சாவு
x
தினத்தந்தி 3 Nov 2021 8:08 PM IST (Updated: 3 Nov 2021 8:08 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பெயிண்டர்

நெல்லை மாவட்டம் களக்காடு ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் சேகர் மகன் மதன் (வயது 29). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து களக்காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்து கட்டாலங்குளம் விலக்கு அருகே வந்தபோது, சென்னையில் இருந்து கங்கைகொண்டான் சிப்காட்டுக்கு வந்த கொண்டிருந்த டேங்கர் லாரி, மதன் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டிரைவர் கைது

தகவல் அறிந்ததும் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டேங்கர் லாரி டிரைவர் ஜெயமுருகனை (31) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story