ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்


ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
x
தினத்தந்தி 3 Nov 2021 9:34 PM IST (Updated: 3 Nov 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவி உபகரணங்கள்

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை  உபகரணங்கள் பெறாத ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களை இலவசமாக பெற்று பயன் பெறலாம்.

பட்டப் படிப்பு படிப்பவர்கள், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் 18 வயதுக்கு மேற்பட்ட பார்வையற்றவர்கள், செவித்திறனற்றவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்களும், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட கால் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறனற்றவர்கள் மற்றும் 75 சதவீதத்துக்கு மேல் மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர் ஆகியோருக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், 18 வயதிற்கு மேற்பட்ட கைகள் நன்றாக இயங்க கூடிய 2 கால்களும் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தனியார் துறையில் பணிபுரிபவர்கள், மற்றும் சுய தொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களும், தசைச்சிதைவு நோய் மற்றும் விபத்து உள்ளிட்ட காரணங்களினால் 2 கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகளும் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கலாம்

இந்த உபகரணங்கள் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதுமில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்வி பயில்வதற்கான சான்று, தனியார் துறையில் பணி, சுய தொழில் புரிவதற்கான சான்று ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரிக்கு வரும் 12-ந்் தேதிக்குள் ராணிப்பேட்டை மாவட்ட சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு கலெக்டர்தெரிவித்துள்ளார்.

Next Story