தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கலெக்டர் தகவல்
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக அரசின் ஊரக புத்தாக்க திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, நெமிலி, சோளிங்கர் மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய 5 வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வட்டாரங்களில் உள்ள தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் ஓரிட சேவை வசதி மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் நிரப்பப்பட உள்ள தொழில்முனைவு மேம்பாட்டு அலுவலர், தொழில் முனைவு நிதி அலுவலர் ஆகிய இரு ஒப்பந்த பணியிடங்களுக்கு ஏதேனும் முதுகலைப் பட்டம் முடித்த மற்றும் கணினி திறன் பெற்றுள்ள 40 வயதுக்குட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி, கணினித் திறன், பணி சார்ந்த அனுபவம் மற்றும் பணிக்கான ஊதியம் குறித்த விவரங்களை https://www.tnrtp.org என்ற இணையதளத்தில் காணலாம்.
விண்ணப்பங்களை அதே இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், வேலூர் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, பூமாலை வணிக வளாகம், அண்ணா சாலை, கற்பகம் சூப்பர் மார்க்கெட் எதிரில், வேலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story