முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: தலைமறைவான நாம் தமிழர் கட்சி பிரமுகரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு
தலைமறைவான நாம் தமிழர் கட்சி பிரமுகரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பொன்னமராவதி:
பொன்னமராவதியை அடுத்த மேலைச்சிவபுரியை சேர்ந்தவர் முத்துராமன். நாம் தமிழர் கட்சியின் பிரமுகரான இவர் கடந்த 24-ந்தேதி தமிழக முதல்-அமைச்சரை தரக்குறைவாகவும், அவதூறாகவும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது இடத்தில் வைத்து பேசியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. திருமயம் தொகுதி பொறுப்பாளர் ஆலவயல் முரளி சுப்பையா என்பவர் திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திலும் வழக்கு பதிவாகி இருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே முத்துராமன் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், முத்துராமன் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் விசாரணை நடத்தினர். இதில் அரசு தரப்பு வக்கீல் வெங்கடேசன், முத்துராமனை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவித்ததோடு முத்துராமனை கைது செய்யவும் வலியுறுத்தினார். இதையடுத்து நீதிபதி தலைமறைவான முத்துராமனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு, முத்துராமனின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
Related Tags :
Next Story