திருவண்ணாமலை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது


திருவண்ணாமலை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 3 Nov 2021 10:42 PM IST (Updated: 3 Nov 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை

தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. 

இதையொட்டி திருவண்ணாமலை நகரை சேர்ந்த மக்கள் பட்டாசு, புது துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக திருவண்ணாமலையில் உள்ள கடை வீதிகளில் குவிந்தனர்.

குறிப்பாக பட்டாசு கடைகளிலும், ஜவுளிக்கடைகளிலும் மக்களின் கூட்டம் அலைமோதியது. 

மேலும் திருவண்ணாமலை மாட வீதியின் சாலையோரங்களில் ஏராளமான சிறு வியாபாரிகள் தற்காலிக கடை அமைத்து உள்ளனர். 

திருவண்ணாமலை நகரில் சின்னக்கடை தெரு, திருவூடல் தெரு, கடலைக்கடை மூலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். 

இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடமின்றி அவதிப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

கொரோனா அச்சமின்றி பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்திருந்தனர். பெரும்பாலானோர் முகக்கசவம் அணியாமல் இருந்தனர். 

அதுமட்டுமின்றி தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் மக்களின் கூட்டமும் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் அதிகமாக காணப்பட்டது.

Next Story