இரட்டை மாட்டு வண்டி பந்தயம்


இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 3 Nov 2021 10:49 PM IST (Updated: 3 Nov 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

கம்பம்: 

கம்பத்தில் பகவதியம்மன்கோவில் திருவிழாவையொட்டி கம்பம்மெட்டு சாலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு, முயல்சிட்டு உள்ளிட்ட பிரிவுகளில் 120-க்கும் மேற்பட்ட ஜோடிகள் பங்கேற்றன. தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

இந்த போட்டி கம்பம்மெட்டு சாலையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே தொடங்கி கம்பம்மெட்டு அடிவாரத்தில் முடிவடைந்தது. பந்தயத்தில் கலந்து கொண்ட காளைகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பரிசுகள் வழங்கப்பட்டது. 

இந்த போட்டியை காண கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து இருந்தனர். இதில் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story