பாணாவரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காவேரிப்பாக்கம்
பாணாவரத்தை அடுத்த கோவிந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சூரியா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. சுரேசுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் குடும்ப பிரச்சினை காரணமாக அதே ஊரில் வசிக்கும் தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சூரியா சென்றுள்ளார். நேற்று அவரை, கணவர் சுரேஷ் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பின்னர் சுரேஷ் வெளியில் சென்றுவிட்டார். திரும்பி வந்தபோது சூரியா மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story