மக்காச்சோளம் விளைச்சல் அமோகம்
தொடர்மழையினால் மக்காச்சோளம் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தாயில்பட்டி,
தொடர்மழையினால் மக்காச்சோளம் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மக்காச்சோளம்
வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி, கங்கரகோட்டை, சங்கரபாண்டியபுரம், சுப்பிரமணியபுரம், பூசாரி நாயக்கன்பட்டி, மீனாட்சிபுரம், அம்மையார்பட்டி, கஸ்தூரிரெங்கபுரம், கொட்டமடக்கிபட்டி, ராமுதேவன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மானாவாரி பயிரான பருத்தி, மக்காச்சோளம் ஆகியவை அதிகம் பயிரிடப்படபட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக மக்காச்சோளம் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் 40 நாள் பயிரான மக்காச்சோள பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கண்மாய்களுக்கும் போதுமான நீர்வரத்து ஏற்பட்டதாலும், வெம்பக்கோட்டை அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்மழையினால் மக்காச்சோளம் விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது வரை விளைச்சலில் எவ்வித பாதிப்பும் இல்லாததால் எதிர்பார்த்த விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story