தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா, புதுப்பட்டி கிராமத்தில் பஸ் நிலையத்தில் இருந்து செக்கடிபஜார் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதே சாலையில் தான் ரேசன் கடையும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-வ.புதுப்பட்டி, பொதுமக்கள்.
தேங்கி நிற்கும் மழைநீர்
மதுரை சதாசிவநகர் மறைமலை அடிகள் தெருவில் உள்ள சாலை பள்ளமாக இருக்கிறது. இதனால் சமீபத்தில் பெய்த மழை நீர், அங்கு தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. எனவே சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும்.
-ஸ்ருஜனா, மதுரை.
சாலை வசதி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா, இ.ராமநாதபுரம் ஊராட்சி இந்திரா காலனியில் 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு சாலை வசதி இல்லாததால் மழை காலங்களில் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், இ.ராமநாதபுரம் ஊராட்சி.
ஆபத்தான மின்கம்பம்
மதுரை-குலமங்கலம் சாலை பனங்காடி போலீஸ் சோதனைச்சாவடி அருகில் சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தினால் அடிக்கடி அங்கு விபத்துகள் நடக்கின்றன. ஆனாலும் அந்த மின்கம்பத்தை அகற்றி, சாலையோரத்தில் நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மிகப்பெரிய அளவில் விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக இந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.
-பிரசாத், பூ.லட்சுமிபுரம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா கீழராஜாகுலராமன் கிராமத்தில் அமைந்துள்ள தெப்ப குளத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளது. அந்த கழிவு நீர் தேக்கம் காரணமாக இப்பகுதியில் உள்ள மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயநிலை நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், கீழராஜாகுலராமன்.
Related Tags :
Next Story