எலச்சிபாளையம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து; 7 பேர் படுகாயம்


எலச்சிபாளையம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து; 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Nov 2021 1:27 AM IST (Updated: 4 Nov 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

எலச்சிபாளையம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து; 7 பேர் படுகாயம்

எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தனியார் பஸ்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று அதிகாலை தனியார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருச்செங்கோடு கொல்லப்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த பூபாலன் (வயது 34) என்பவர் ஓட்டினார். இந்த பஸ் எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பாலம் பகுதியில் வந்தபோது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது பஸ் டிரைவர் திடீரென பிரேக் அடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த டிரைவர் பூபாலன் மீட்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
சிகிச்சை
மேலும் இடுப்பு பகுதியில் காயம் அடைந்த ராசிபுரம் சீராப்பள்ளி பகுதியை சேர்ந்த கண்டக்டர் செல்வம் (45) சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  பஸ்சில் பயணம் செய்த ராசிபுரம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் (35), காக்காவேரி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (43), கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த தீனதயாளன் (39), கோத்தகிரி பகுதியை சேர்ந்த கதிர் (35), அவருடைய மனைவி துர்கா தேவி (33) ஆகியோர் படுகாயமடைந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்த விபத்தால் கொன்னையார் பாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story