வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அண்ணன், தம்பியிடம் ரூ.3¼ லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அண்ணன், தம்பியிடம் ரூ.3¼ லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பணம் மோசடி
களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு செக்காலவிளையை சேர்ந்தவர் ஜீவா (வயது 24). இவரது தம்பி ஸ்டின் (23). இவர்கள் இருவரும் வேலை தேடி வந்தனர். அப்போது மடிச்சல் அருகே உள்ள அஞ்சாங்கோடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (42) அவருடைய மனைவி அனிதா ஆகியோர் அறிமுகமாகி வெளிநாட்டில் நிர்வாகத்துறை சம்பந்தமான வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.3 லட்சத்து 37 ஆயிரத்து 400 வரை செலவாகும் என்றும் கூறினர். அவர்கள் கூறியபடி அண்ணன், தம்பி இருவரும் ரூ. 3 லட்சத்து 37 ஆயிரத்து 400 கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால் அவர்கள் கூறியதை போன்று வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. மேலும், பணத்தை திரும்ப கேட்ட போது கொடுக்க மறுத்து மோசடி செய்ததாக தெரிகிறது.
கைது
இதுகுறித்து ஜீவாவும், ஸ்டினும் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் மற்றும் அவருடைய மனைவி அனிதா ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story