ஆடு திருடிய வாலிபர் கைது
ஆடு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடையம்:
ஆழ்வார்குறிச்சி அருகே கபாலிபாறை வடக்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அரிச்சந்திரன் (வயது 25). இவரும் காக்கநல்லூரைச்சேர்ந்த அய்யப்பன் என்பவரும் சேர்ந்து ஆம்பூரில் கசமுத்து என்பவரது ஆட்டை திருடி ஆட்டோவில் வைத்து ஆழ்வார் குறிச்சி அருகே கொண்டு வந்து கொண்டிந்தனர்.
இதையறிந்த கசமுத்து பின்னால் வேகமாக வந்து ஆழ்வார்குறிச்சி தெப்பகுளம் அருகே ஆட்டோவை வழிமறித்து பிடித்துள்ளார். அப்போது கசமுத்துவை அரிச்சந்திரன் மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரும் மிரட்டியுள்ளனர். இதுபற்றி அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆட்டையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். அரிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தப்பியோடிய அய்யப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story