வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி; வாலிபர் கைது


வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Nov 2021 3:19 AM IST (Updated: 4 Nov 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி

ராதாபுரம்:
ராதாபுரம் அருகே இடிந்தகரையைச் சேர்ந்தவர் ஹெக்டர் மகன் கிராஸ் அஜித் (வயது 25). இவருக்கு வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி, தூத்துக்குடி ஆத்தூரைச் சேர்ந்த சுப்பையா மகன் கார்த்திக் (35) என்பவர் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பெற்று கொண்டார். பின்னர் வெளிநாட்டில் கப்பல் வேலைக்கு அஜித் சென்றார்.
ஆனால் அங்கு போதிய முன்பணம் செலுத்தவில்லை என்று கூறி, அவரை 3 மாதங்களில் திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிராஸ் அஜித் இதுகுறித்து ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

Next Story