மூலைக்கரைப்பட்டியில் பாட்டியுடன் 2 பெண் குழந்தைகள் திடீர் மாயம்
பாட்டியுடன் 2 பெண் குழந்தைகள் திடீர் மாயம்
இட்டமொழி, நவ.4-
மூலைக்கரைப்பட்டி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 50).
இவரது மகள் மரியாள் (31). மருமகன் கோபாலகிருஷ்ணன் (வயது 35). கோபாலகிருஷ்ணன் கூலி வேலை செய்து வருகிறார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வருத்தப்பட்டு வந்த செல்வமணி, மரியாளின் மகள்களான ஜோஸ்பின் (8), இன்ஷா (5) ஆகியோரை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் கோபாலகிருஷ்ணன், பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் கிடைக்காததால் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன் வழக்குப்பதிவு செய்து பாட்டி செல்வமணி மற்றும் 2 பெண் குழந்தைகளை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story