விஜயாப்புராவில் மீண்டும் நிலநடுக்கம்


விஜயாப்புராவில் மீண்டும் நிலநடுக்கம்
x
தினத்தந்தி 5 Nov 2021 1:40 AM IST (Updated: 5 Nov 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

விஜயாப்புராவில் மீண்டும் நிலநடுக்கம்

பெங்களூரு: விஜயாப்புராவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். 

அடிக்கடி நிலநடுக்கம்

விஜயாப்புரா மாவட்டத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில் விஜயாப்புரா மாவட்டம் திகோட்டா தாலுகா அருகே சித்தாபுரா, தன்னர்கி கிராமங்களில் வசிக்கும் மக்கள் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். 
அதிகாலை 2 மணியளவில் அந்த 2 கிராமங்களிலும் உள்ள வீடுகள் திடீரென்று குலுங்கியது. 
அத்துடன் பலத்த சத்தமும் வந்தது. இதனால் கிராமங்களில் வசித்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து விட்டனர். நீண்ட நேரமாக வீட்டு வெளியே மக்கள் இருந்ததால் தூங்க முடியாமல் பரிதவித்தனர். பின்னர் நேற்று காலையில் 2 கிராமங்களுக்கும் சென்று அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

ரிக்டர் அளவில்

அப்போது சித்தாபுரா, தன்னர்கி கிராமங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. 

விஜயாப்புரா மாவட்டம் திகோட்டாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருவதால் கிராம மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.

Next Story