போலீஸ்காரரின் மகன் கழுத்தை அறுத்து கொலை


போலீஸ்காரரின் மகன் கழுத்தை அறுத்து கொலை
x
தினத்தந்தி 5 Nov 2021 1:48 AM IST (Updated: 5 Nov 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

கலபுரகி பஸ் நிலையத்தில் போலீஸ்காரரின் மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கலபுரகி: கலபுரகி பஸ் நிலையத்தில் போலீஸ்காரரின் மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

போலீஸ்காரரின் மகன்

கலபுரகி மாவட்டம் வித்யாநகர் லே-அவுட்டை சேர்ந்தவர் சந்திரகாந்த். இவரது மகன் அபிஷேக் (வயது 27). சந்திரகாந்த் போலீஸ்காரர் ஆவார். நேற்று காலையில் உடற்பயிற்சி மையத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அபிஷேக் புறப்பட்டு சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து மா்மநபர்கள் வந்தனர்.

இதனை கவனித்த அவர், பஸ் நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மர்மநபர்களிடம் இருந்து தப்பி சென்றுள்ளார்.. ஆனால் அவரை விடாமல் மர்மநபர்கள் விரட்டி சென்றார்கள். பின்னர் பஸ் நிலையத்தில் வைத்தே அபிஷேக்கை மா்மநபர்கள் சுற்றி வளைத்தனர். மா்மநபர்களிடம் இருந்து தப்பிக்க அவர் முயன்றும் முடியாமல்போனது.

கழுத்தை அறுத்து கொலை

இந்த நிலையில், பஸ் நிலையத்தில் பயணிகள் முன்னிலையிலேயே அபிஷேக்கை மா்மநபர்கள் கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். பின்னர் அவரது கழுத்தையும் அறுத்ததாக தெரிகிறது. இதில், கழுத்தில் பலத்த காயம் அடைந்த அபிஷேக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிர் இழந்தார். பின்னர் அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பஸ் நிலையத்தில் வைத்து நடந்த இந்த கொலை சம்பவத்தால், அங்கிருந்த பயணிகள் பீதி அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் கலபுரகி அசோக்நகர் போலீசார் விரைந்து வந்து அபிஷேக் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

வலைவீச்சு

அப்போது முன்விரோதம் காரணமாக அபிஷேக்கை மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அபிஷேக் கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா?, கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story