ஒரேநாளில் மது விற்பனை


ஒரேநாளில் மது விற்பனை
x
தினத்தந்தி 5 Nov 2021 5:14 PM IST (Updated: 5 Nov 2021 5:14 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையன்று மது விற்பனை நடந்தது.

திருப்பூர், நவ.6-
தீபாவளி பண்டிகையன்று திருப்பூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்தது. .
தீபாவளி பண்டிகை
திருப்பூர் மாவட்டம் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். நாளொன்றுக்கு ரூ.6½ கோடி முதல் ரூ.7 கோடி வரை மது விற்பனை நடப்பது வழக்கம். மாவட்டத்தில் 250 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 139 பார்கள் செயல்படுகிறது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பார்கள் செயல்பட தொடங்கியதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி மது விற்பனை களை கட்டியது. பண்டிகை என்றாலே மதுப்பிரியர்கள் மதுவுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அதுவும் தீபாவளி பண்டிகை என்றால் கிடைக்கும் போனஸ் தொகையை மகிழ்ச்சியாக செலவு செய்வது வாடிக்கை. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை மதுவுடன் தொழிலாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ரூ.10 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு முதல் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களை கட்டியது. நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையன்று மது விற்பனை அதிகமாக இருந்தது. காலை முதல் மதியம் வரை மந்த நிலையை அடைந்த போதிலும் மாலை தொடங்கி இரவு வரை மது விற்பனை ஜோராக நடைபெற்றது. விடிய, விடிய மது அருந்தி கொண்டாடியவர்கள் பலர். அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தாஜூதீன் தெரிவித்தார்.
வழக்கமான நாட்களில் சராசரியாக ரூ.7 கோடிக்கு மது விற்பனை நடக்கும். தீபாவளி பண்டிகையன்று கூடுதலாக ரூ.3 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.



Next Story