கோவில்பட்டியில் பஸ் மோதி விவசாயி பலியானார்


கோவில்பட்டியில் பஸ் மோதி விவசாயி பலியானார்
x
தினத்தந்தி 5 Nov 2021 8:02 PM IST (Updated: 5 Nov 2021 8:02 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பஸ் மோதி விவசாயி பலியானார்

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிசாமி (வயது 61). விவசாயி. இவர் நேற்று காலையில் தனது நிலத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார். நாலாட்டின்புதூர் - இடைசெவல் அருகே அவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக மாரிசாமி ஓட்டிச்சென்ற சைக்கிள் மீது மோதியது.
இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் ராஜூவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story